search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் கொலை"

    பிசியோதெரபிஸ்ட் டாக்டர் கொலை வழக்கில் கூலிப்படையுடன் கைதான மாணவி ஈஸ்வரி திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
    திருச்சி:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் டாக்டரான விஜயகுமார் (வயது 36) என்பவரை திருச்சியை சேர்ந்த மாணவி ஈஸ்வரி (21) என்பவர் கூலிப்படையை ஏவி கடந்த 8-ந் தேதி கொலை செய்தார்.

    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் ஈஸ்வரி மற்றும் கூலிப்படையை சேர்ந்த மாரி முத்து, கணேஷ், குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் விஜயகுமாரிடம் பறித்த நகை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ஈஸ்வரி சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி சி.ஏ. படித்த போது, அங்கு தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்டாக வேலை பார்த்த விஜயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து ஈஸ்வரியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஈஸ்வரியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். தன்னுடன் ஈஸ்வரி உல்லாசமாக இருப்பதை வீடியோவும் எடுத்துள்ளார். விஜயகுமாருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்ததும், ஈஸ்வரி அவரைவிட்டு விலக தொடங்கியுள்ளார். ஆனால் விஜயகுமார் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததுடன் தன்னை திருமணம் செய்யாவிட்டால் உல்லாசமாக இருந்த படத்தை யுடியூப்பில் வெளியிடுவதோடு, ஈஸ்வரியின் தந்தை, தங்கையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் ஆத்திரத்தில் ஈஸ்வரி கூலிப்படையை ஏவி விஜயகுமாரை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான கூலிப்படை ஆட்கள் மாரிமுத்து, கணேஷ், குமார் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால் ஈஸ்வரியை பெண்கள் சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது சிறைத்துறை போலீசார் மருத்துவ சான்றிதழ் அளித்த பிறகு தான் காவலில் அடைக்க முடியும் என கூறி விட்டனர்.

    இதனால் மாணவி ஈஸ்வரி நேற்று இரவு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

    கொலை செய்யப்பட்ட டாக்டர் விஜயகுமார் தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக ஈஸ்வரி கூறியுள்ளார். அவருக்கு பாலியல் சோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஈஸ்வரி திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்படுவார்.

    இதற்கிடையே ஈஸ்வரி அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரி அறை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடிய விடிய போலீசார் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர். இரவில் ஈஸ்வரி தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி கண்ணீர் வடித்தபடியே இருந்துள்ளார்.
    திருச்சியில் கள்ளக்காதல் பிரச்சனையில் டாக்டரை கொலை செய்ததாக கல்லூரி மாணவியை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவலை அடுத்த திருவளர்ச்சோலை புத்து நாகம்மன் கோவில் அருகே காவிரி ஆற்று பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அழகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். மேலும் அவரது கழுத்து, மார்பு பகுதியில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது. இதனால் அவர் கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை பொன்பரப்பிகுடிக்காடு பகுதியை சேர்ந்த பிசியோதெரபி டாக்டர் விஜயகுமார் (வயது 36) என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானதும் தெரியவந்தது.

    இது குறித்து அவரது மனைவி கற்பகாம்பிகை செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது கொலை செய்யப்பட்டு கிடந்தது விஜயகுமார் என்பது உறுதியானது.

    அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விஜய குமாரின் செல்போனில் பதிவாகியிருந்த போன் நம்பர்களை வைத்து விசாரித்த போது திருச்சி உறையூரை சேர்ந்த ஒரு பெண்ணின் செல்போன் நம்பர் பதிவாகியிருந்தது.

    இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால், சந்தேகமடைந்துள்ள போலீசார் அவர் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

    பிசியோதெரபி டாக்டரான விஜயகுமார் சென்னையில் பணியாற்றி வந்துள்ளார். விஜயகுமாருக்கு திருமணமாகி கற்பகாம்பிகை என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். ஈரோட்டை சேர்ந்த கற்பகாம்பிகை அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இதனிடையே சென்னையில் பணியாற்றி வந்த விஜகுமார், அங்கு சி.ஏ. படித்து வந்த திருச்சி உறையூரை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு ள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இரு வரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தன்று சொந்த ஊரான அரியலூர் பொன்பரப்பிக்கு வந்த அவர், ஈரோட்டில் உள்ள மனைவியை பார்க்க செல்வதாக உறவினர்களிடம் கூறி விட்டு சென்றுள்ளார். திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே சென்றதும் மனைவிக்கு போன் செய்துள்ளார். அப்போது திருச்சியில் இருந்து ஈரோடுக்கு பஸ் ஏறியவுடன் பேசுகிறேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

    அதன்பிறகு அவர் கற்பகாம்பிகைக்கு போன் செய்யவில்லை. மேலும் ஈரோட்டிற்கும் செல்லவில்லை. இதையடுத்தே விஜயகுமார் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் தான் அவர் திருவளர்ச்சோலை காவிரி ஆற்றுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். கள்ளக்காதல் பிரச்சினையில் உறையூரை சேர்ந்த கல்லூரி மாணவி, அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து விஜயகுமாரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இது தொடர்பாக அந்த பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் விஜயகுமாரின் உறவினர்கள், நண்பர்கள் என 15 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. #tamilnews
    ×